உலகம்
சந்திரயான்-3யை போல நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப முயன்ற ஜப்பான்: நிறுத்திய திட்டம்
சந்திரயான்-3யை போல நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப முயன்ற ஜப்பான்: நிறுத்திய திட்டம்
ஜப்பான் நிலவுக்கு அனுப்ப முயன்ற விண்கலத்தின் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தியாவின் சந்திரயான்-3யின் வெற்றி உலகளவில் பாராட்டுகளை பெற்றதுடன், பல நாடுகளை ஊக்கப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் ஜப்பான் Moon Snipper எனும் விண்கலத்தை நிலவுக்கு இன்று அனுப்ப திட்டமிட்டிருந்தது.
ஜப்பானின் புதிய ஒளியியல் வான் பொருட்களை வெளிப்படுத்தும் புரட்சிகரமான செயற்கைக்கோள் மற்றும் Moon Snipper லூனார் லேண்டர், ஞாயிறு இரவு 8.26 மணிக்கு அல்லது திங்கள் காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சீரற்ற வானிலை, அதாவது ஏவுதளத்திற்கு மேலே அதிக காற்று காரணமாக, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி ஏவுதலுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்டது.
புதிய ஏவுதல் திகதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், தனேகாஷிமா விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளம் செப்டம்பர் 15ஆம் திகதி வரை ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் விஞ்ஞானிகள் SLIM (Smart Lander for Investigating Moon) என்று கூறும் இந்த விண்கலம், நிலவை அடைய சுமார் 4 முதல் 6 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று அறிவித்தனர்.
ஏற்கனவே 26ஆம் திகதியும் மோசமான வானிலை காரணமாக SLIM விண்கலத்தின் ஏவுதல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.