உலகம்

பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை!

Published

on

பாடசாலை வராத மாணவர்களின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை!

20 நாட்களுக்கு மேல் பாடசாலை வராமல் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இனி சிறை தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு மாணவர் 20 நாட்களுக்கு பாடசாலைக்கு வரவில்லை என்றால் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்புவது பள்ளியின் பொறுப்பாகும்.

அந்த அலுவலகம் விசாரித்து பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். இதை அலட்சியமாக எடுக்கும் பெற்றோர்களுக்கு தான் இந்தநிலை ஏற்படும்.

பாடசாலை வராமல் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இனி சிறை தண்டனை! | School Students Absent Soudi Arabia Parents Order

இது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு மாணவர் 3 நாட்கள் விடுமுறை எடுத்தால் முதல் எச்சரிக்கையும் 5 நாட்கள் விடுமுறை எடுத்தால் 2 வது எச்சரிக்கை விடுக்கப்படும்.

10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 3வது எச்சரிக்கை அளித்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு உறுதி மொழியில் கையெழுத்திட வேண்டும்.

15 நாட்களுக்கு வரவில்லையென்றால் அந்தமாணவர் வேறு பாடசாலைக்கு மாற்றப்படுவார்.

மேலும் 20 நாட்களுக்கு தொடர்ந்து வரவில்லை என்றால் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version