உலகம்

உக்ரைன் சுதந்திரத்தை முதலில் ஆதரித்தது கனடா! ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

Published

on

உக்ரைன் சுதந்திரத்தை முதலில் ஆதரித்தது கனடா! ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சி

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேசியது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் உக்ரைன் தனது 32வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அப்போது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றிய வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதில், ஒரு சிறந்த நாடான உக்ரைனின் சிறந்த மக்கள் சிறப்பான நாளை கொண்டாடுகிறார்கள் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கனேடிய பிரதமருடன் பேசியது குறித்து ஜெலென்ஸ்கி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‘ஜஸ்டின் ட்ரூடோ உடன் நட்புமுறையான அழைப்பு. இன்றைய கிரிமியா பிளாட்ஃபார்ம் உச்சி மாநாட்டில் ஆற்றிய சக்தி வாய்ந்து உரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உக்ரைனின் சுதந்திரத்தை முதலில் ஆதரித்த நாடுகளில் கனடாவும் ஒன்றாகும். மேலும் இந்த கடினமான காலங்களிலும் தலைவர்களின் ஆதரவு தொடர்கிறது’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Exit mobile version