உலகம்
டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய வீரர்கள்
டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய வீரர்கள்
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் நுழைய முயன்று டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய ராணுவ வீரர்களை வெளியேற்றி இருப்பதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு டான்பாஸ் உட்பட 4 நகரங்களை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதை ரஷ்யாவின் ஒற்றை பகுதியாகவும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா அறிவித்தது.
இருப்பினும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை எப்படியாவது மீண்டும் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைய முயன்று டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்ற 150 உக்ரைனிய ராணுவ வீரர்களை வெற்றிகரமாக வெளியேற்றி இருப்பதாக சனிக்கிழமை ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த 150 உக்ரைனிய ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனரா அல்லது சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனரா என்று தெளிவாக தெரியவில்லை.
இது தொடர்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அரசாங்கம் தெரிவித்த தகவலில், ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான கிழக்கு கெர்சன் பகுதியில் உக்ரைனின் நாசவேலை கும்பல் டினிப்ரோ ஆற்றை கடக்க முயன்றது.
ஆனால் அதை ரஷ்ய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து விட்டது என தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login