உலகம்
வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக் கொல்லும் ரஷ்யர்கள்: பரபரப்பு தகவல்
வாக்னர் கூலிப்படையினரை கல்லால் அடித்துக் கொல்லும் ரஷ்யர்கள்: பரபரப்பு தகவல்
ஆட்சிக் கவிழ்ப்புக்கு திட்டமிட்ட வாக்னர் கூலிப்படையினரை வரவேற்ற அதே ரஷ்யர்கள், இப்போது அவர்களைக் கல்லால் அடித்துக் கொல்வதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்யப்படையினருக்கு உதவியாக கொடூர செயல்களில் ஈடுபட்ட வாக்னர் கூலிப்படை, திடீரென ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக திரும்பிய விடயம் உலகையே பரபரப்படையச் செய்தது.
மாஸ்கோ நோக்கி புறப்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவரான Yevgeny Prigozhin, மற்றும் அவரது வீரர்களை பொதுமக்கள் வரவேற்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி புருவம் உயர்த்தச் செய்தன.
தலைகீழாக மாறிய நிலைமை
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஆம், ரஷ்யாவுக்கு மீண்டும் திரும்பும் வாக்னர் கூலிப்படையினரை ரஷ்ய மக்கள் தாக்குவதாகவும், சிலரை கல்லால் அடித்துக் கொன்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருவதால், அவர்கள் அச்சத்திலிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
போரில் பங்கேற்ற வாக்னர் குழுவினர் நாடு திரும்பலாம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் அனுமதியளித்துள்ள நிலையில், பொதுமக்களோ அவர்களுக்கெதிராக வன்முறையில் ஈடுபடத் துவங்கியுள்ளார்கள்.
எதனால் பொதுமக்கள் வாக்னர் குழுவினருக்கு எதிராக திரும்பியுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படையினர் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login