உலகம்
பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானியாவில் குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் கடற்கரைகளை தூமைப்படுத்துவதற்காக குப்பை சேகரிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு பார்சல் கிடைத்தது.
குப்பை சேகரிக்கும் பெண்ணுக்கு கிடைத்த பார்சல்
Jodie Harper என்னும் அந்தப் பெண் கடற்கரையை சுத்தப்படுத்திக்கொண்டிருக்கும்போது, அவருக்கு ஒரு பார்ச்ல கிடைத்துள்ளது.
பிளாஸ்டிக் கவர் ஒன்றினுள் ரப்பர் அடுக்கு ஒன்றுடன் வெள்ளை நிறப் பவுடர் இருப்பதைக் கண்ட Jodie, உடனடியாக அதை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
காத்திருந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும்
அந்த பார்சலில் இருந்தது கொக்கைன் என்னும் போதைபொருள் என்பது தெரியவரவே, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளார் Jodie. காரணம், இதுவரை இப்படி கடற்கரையை சுத்தம் செய்யும்போது, அவருக்கு இப்படி ஒரு பார்சல் கிடைத்ததில்லையாம்.
அந்த பார்சலில் இருந்த போதைப்பொருளின் மதிப்பு, தோராயமாக 100,000 பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
பொலிசார், அந்த பார்சலின் சொந்தக்காரரை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
You must be logged in to post a comment Login