உலகம்
உக்ரைனில் கொடிய ஏவுகணைகளை குவிக்கும் பிரான்ஸ்!
உக்ரைனில் கொடிய ஏவுகணைகளை குவிக்கும் பிரான்ஸ்!
நீண்ட தூர இலக்குகளை தாக்கக்கூடிய SCALP ஏவுகணைகளை உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 525 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணை தங்களுக்கு வழங்குமாறு மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.
இந்நிலையில் நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் பிரான்ஸின் SCALP ஏவுகணை உக்ரைனுக்கு வந்தடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து விமானப்படை தளத்திற்கு வந்து இருந்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உக்ரைனிய விமானப்படை வீரர்கள் பயன்படுத்தும் இராணுவ உபகரணங்கள் மற்றும் மார்டன் ஆயுதங்களை பார்வையிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் SCALP ஏவுகணை ஏவுகணை மீது “உக்ரைனுக்கு வெற்றி” (Glory to Ukraine) என்று கையெழுத்திட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login