உலகம்
பிரித்தானியாவின் மிதக்கும் சிறைக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள்
பிரித்தானியாவின் மிதக்கும் சிறைக்குள் புகலிடக்கோரிக்கையாளர்கள்
பிரித்தானியாவில் அடைக்கலம் கோரும் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதக்கும் குடியிருப்பில் தங்க முதல்முறையாக அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
220 படுக்கையறைகள் கொண்ட அந்த மிதக்கும் குடியிருப்புகளில் இனி எவரையும் அனுப்பாதவகையில் தாங்கள் நடவடிக்கை எடுக்க இருப்பதாக சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலம்புகலிடக்கோரிக்கையாளர்களை தங்கவைக்கும் செலவு 1.9 பில்லியன் பவுண்டுகளை எட்டிய நிலையில், மிதக்கும் குடியிருப்புகளை உருவாக்க ரிஷி சுனக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன், புகலிடக் கோரிக்கையாளர்களின் உளவியல் சிக்கல்கள், உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் வேறு தனிப்பட்ட காரணங்களை பட்டியலிட்டு, உள்விவகார அமைச்சகத்திற்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் ஆராய்ந்துளளன.
இந்த நிலையில், அந்த மிதக்கும் சிறைக்குள் அனுப்ப முயன்ற 20 புலம்பெயர் மக்களை தடுத்து நிறுத்தியதாக தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 1
இதன்படி 5 பேர் மிதக்கும் குடியிருப்பில் சென்றுள்ளதுடன், மூன்று முதல் 9 மாதங்கள் வரையில் தங்கவைக்கப்படுவார்கள். இவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login