உலகம்
நடமாடும் சுடுகாட்டில் ராணுவ வீரர்களை தகனம் செய்யும் ரஷ்யா!

நடமாடும் சுடுகாட்டில் ராணுவ வீரர்களை தகனம் செய்யும் ரஷ்யா!
ரஷ்யா, தன் தரப்பு இழப்புகளை மறைப்பதற்காக, போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களை, நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்துவிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் சுடுகாடு
உக்ரைன் போரில் ரஷ்ய தரப்பில் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், இழப்புகளை மறைப்பதற்காக, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை ரஷ்யா, உக்ரைனில் வைத்தே தகனம் செய்துவிடுவதாகவும், உக்ரைன் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் உக்ரைன் நகரமான Melitopolஇல் ஒரு நடமாடும் தகன வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்கள் ட்ரக்குகள் மூலம் அங்கு கொண்டு வரப்படுவதாகவும், அங்கு வைத்தே அந்த உடல்கள் தகனம் செய்யப்படுவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
அந்த தகன வாகனத்தில் தொடர்ந்து உடல்கள் தகனம் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பதால், எப்போதும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருக்கிறதாம்.
குறிப்பாக இரவு நேரங்களில் பிணவாடை வீசிக்கொண்டே இருப்பதாக உள்ளூர் மக்கள் புகார் கூறுவதாகவும் உக்ரைன் ராணுவ பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login