உலகம்
வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை
வட கொரியாவுக்கு தென் கொரியா பகீர் எச்சரிக்கை
எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் கொரியாவில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த அமெரிக்கா
இந்த வாரம் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் USS கென்டக்கி கடந்த செவ்வாய்கிழமை பூசனுக்கு வருகை தந்து இருந்தார்.
மேலும் இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக 18,750 டன் ஓஹியோ-வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை அமெரிக்கா தென் கொரியாவில் நிலைநிறுத்தியுள்ளது.
இதன் மூலம் 1981ம் ஆண்டுக்கு பிறகு நீர்மூழ்கி அணுசக்தி கப்பல் ஏவுகணை தென்கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் USS கென்டக்கி-யின் தென் கொரிய வருகைக்கும், 18,750 டன் ஓஹியோ-வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஏவுகணையை நிலைநிறுத்துவத்துவதற்கு கண்டனம் தெரிவித்தும் வட கொரியா அணு ஆயுத தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்து இருந்தது.
அதில், அமெரிக்க நீர்மூழ்கி அணுஆயுதத்தை நிலைநிறுத்துவது மற்றும் மற்ற மூலோபாய சொத்துகளை நிலைநிறுத்துவது, தங்களின் அணுஆயுத பயன்பாட்டிற்கான நிபந்தனையை பூர்த்தி செய்யக்கூடிய நிபந்தனையாகும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தது.
வட கொரியாவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஆட்சி முடிவுக்கு வழிவகுக்கும் என்று தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா-தென்கொரிய கூட்டணிக்கு எதிரான வடகொரியாவின் எந்த அணு ஆயுத தாக்குதலும், உடனடி பதில் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும், மற்றும் அதன் விளைவுகள் வட கொரிய ஆட்சியின் முடிவாக இருக்கும் என்று சியோல் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
You must be logged in to post a comment Login