உலகம்
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மனியில் வாழும் திறன்மிகுப் பணியாளர்கள், இனி தங்கள் குடும்பத்தினரையும் ஜேர்மனிக்கு வரவழைத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று தயாராகிவருகிறது.
திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் என்னும் அந்த சட்டத்தின் கீழ், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவி, மற்றும் குழந்தைகளை மட்டும் அல்லாது, தங்கள் பெற்றோரைக்கூட இனி ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளலாம்.
கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி, ஜேர்மனி நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த சட்டத்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டது.
இம்மாதம், அதாவது, ஜூலை 7ஆம் திகதி, நாடாளுமன்றத்தின் மேலவையில், திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
திட்டமிட்டப்படி, எல்லாம் நல்லபடியாக நடந்துமுடிந்தால், 2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்குள் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் மசோதா ஜனாதிபதியால் சட்டமாக்கப்பட்டு அமுல்படுத்தப்படும்.
எப்படியும், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் அமுலுக்கு வர வாய்ப்புள்ளது.
You must be logged in to post a comment Login