உலகம்
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ராணுவ விமானம்: வாக்னர் படையினர் அதிரடி தாக்குதல்
ரஷ்யாவின் ராணுவ விமானத்தை வாக்னர் கூலிப்படை சுட்டு வீழ்த்திய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாக்னர் கூலிப்படை வீரர்களை ரஷ்ய ராணுவம் குறி வைத்து தாக்குவதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்பு காட்டும் விதமாக மாஸ்கோவை நோக்கி வாக்னர் கூலிப் படை அணிவகுத்துச் சென்றது.
இதையடுத்து உக்ரைன் போரில் களமிறக்கப்பட்ட வாக்னர் கூலிப்படைக்கும், ரஷ்யா ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ரஷ்யாவில் உள்நாட்டு போர் வெடிப்பதற்கான அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் ரஷ்யாவின் விமானப்படையை சேர்ந்த Ilyushin Il-22M என்ற ராணுவ விமானத்தை வாக்னர் கூலிப்படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த விமானத்தில் ரஷ்ய ராணுவ ஜெனரல்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்து இருக்கலாம் என நம்பப்படுகிறது, ஆனால் யார் யார் பயணித்தார்கள் என்ற விவரங்கள் வெளிவரவில்லை.
வாக்னர் கூலிப்படை ரஷ்ய ராணுவத்தின் Ilyushin Il-22M விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானம் தீ பிழம்புகளுடன் வோரோனேஜ்(Voronezh) என்ற இடத்தில் கீழே விழும் வீடியோ கடந்த ஜூன் 24ம் திகதி இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ராணுவத்துடனான மோதல் பிறகு குறைந்தது 5 ஹெலிகாப்டர்கள் உட்பட 6 ரஷ்ய ராணுவ விமானங்களை வாக்னர் படை அழித்து இருக்கலாம் என பல்வேறு ஊடக தகவல்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
மேலும் வாக்னர் படை சுட்டு வீழ்த்திய இந்த விமானங்களில் பயணித்த நபர்களில் குறைந்தது 15 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login