இந்தியா
வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்ற பசு
இந்தியாவிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு.
திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தீப ஆராதனையின் போது நாட்டு பசுக்களில் இருந்து பெறப்பட்ட பால், தயிர், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும்.
இதற்கு 500 பசுக்கள் தேவைப்படும் நிலையில், 200 உயர் ரகத்தை சேர்ந்த நாட்டு பசுக்கள் உள்ளன.
மேலும் 300 பசுக்களை வழங்க பக்தர்களும் முன்வந்துள்ளனர், இந்நிலையில் பாலின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வாடகைத்தாய் மூலம் கலப்பினங்களாக உற்பத்தில் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.
இதன்படி ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைகழகத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
தொடர்ந்து வடமாநிலங்களில் உள்ள உயர் ரக பசுக்களின் கருமுட்டைகளை பல்கலைகழகம் சேகரிக்கத் தொடங்கியது.
அங்கு உயர் ரக காளைகளின் விந்தணுக்களுடன் இணைத்து கருத்தரிக்க செய்யப்பட்டன.
இந்த கரு ஓங்கோல் பசுவின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது, முறையாக கண்காணிக்கப்பட்ட ஓங்கோல் பசு, தற்போது கன்று ஈன்றுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு.
இதற்கு பத்மாவதி என பெயரிட்டுள்ளனர், அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்று 300க்கும் மேற்பட்ட கன்றுகளை உருவாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login