உலகம்

வாக்னர் குழுவின் திட்டம் அமெரிக்காவுக்கு தெரியுமா..! அன்டனி பிளிங்கன் பகீர்

Published

on

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மொஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியிருக்கிறது.

போர் நிறுத்தம்

போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மொஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்திருந்தது.

கிளர்ச்சியாளர்களுக்கான பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டதால், ரஷ்யா முழுவதும் வாக்னர் போராளிகளின் இயக்கத்தை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனவே, போராளிகள் உக்ரைனில் தங்களின் கள முகாம்களுக்கு பின்வாங்க உத்தரவிடப்பட்டதாக வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.

ரஷ்யாவின் உள்விவகாரம்

வாக்னர் குழுவின் தலைவர் தனது திட்டத்தை கைவிடுவார் என்று உங்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அன்டனி பிளிங்கென், “எனக்குத் தெரியாது, மேலும் நாங்கள் முழுமையாக அறிவோம் என்று எனக்குத் தெரியவில்லை.

இது வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் வெளிப்படும் விஷயமாக இருக்கலாம். அதைப் பற்றிய தெளிவான புரிதல் எங்களிடம் இல்லை.

இது உண்மையில் ரஷ்யாவின் உள்விவகாரம். ஆனால் நாங்கள் அறிந்தது என்னவென்றால், அவர்களிடையே உண்மையான விரிசல்கள் வெளிப்படுவதை நாங்கள் காண்கிறோம்.

மீண்டும் புடினின் அதிகாரம் மிக்க நேரடி சவால் பகிரங்கமாக வெளிவருகிறது. இந்தப் போர், இந்த ஆக்கிரமிப்பு ரஷ்யாவின் தவறான சாக்குப்போக்குகளின் கீழ் பின்தொடரப்பட்டது” என்றார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version