உலகம்
மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு !
அமெரிக்காவின் வலுவான எரிபொருள் தேவைக் காரணமாக, எரிபொருள் விலையானது முந்தைய நாளின் வீழ்ச்சிக்கு பின்னர் வியாழக்கிழமை (11) அதிகரித்துள்ளன.
அதன்படி, ப்ரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.2% ஆக அதிகரித்து 76.58 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
அமெரிக்க மசகு எண்ணெய் விலையும் 0.2% ஆக அதிகரித்து 72.84 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் எரிபொருள் தேவை வலுவடைந்துள்ளதனால் சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலை அதிகரித்துள்ளது.
You must be logged in to post a comment Login