உலகம்
11வயதில் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை!
11 வயது சிறுமி ஒருவர் இளம் வயதில் முதுகலைப் பட்டம் பெற்று சாதனையை படைத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அதாரா பெரெஸ் சான்செஸ் என்ற 11 வயது சிறுமி, மிக இளம் வயதிலேயே முதுகலைப் பட்டம் பெற்று சாதனையை படைத்துள்ளார்.
இரண்டு சிறந்த இயற்பியலாளர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரை விட அதிக IQ உள்ளதாக பரிசோதிக்கப்பட்ட அதாரா, தனது IQ தேர்வில் 162 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இந்த மெக்சிகன் ஒரு நாள் நாசாவுடன் இணைந்து பணியாற்றுவதாக நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மெக்சிகன் விண்வெளி ஏஜென்சியுடன் இளம் மாணவர்களுக்கு விண்வெளி ஆய்வு மற்றும் கணிதத்தை ஊக்குவித்து வருவதாக பிரெஞ்சு பத்திரிகையான மேரி கிளாரி தெரிவித்துள்ளது.
11 வயதான சிஎன்சிஐ பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பட்டமும், மெக்சிகோவின் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டியில் கணிதத்தில் நிபுணத்துவம் பெற்ற தொழில்துறை பொறியியலில் மற்றொரு பட்டமும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login