உலகம்
கனடாவில் வேகமாக பரவிய காட்டுத்தீ!
கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் அந்நாட்டு அவசரகால மேலாண்மை அமைச்சகம் தெரிவிக்கையில், பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் மேல் எழும்பி உள்ளது.
காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.
காட்டுத்தீயால் அதிகரித்த வெப்பம் காரணமாக 13000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது.
You must be logged in to post a comment Login