உலகம்
படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்!
சீன நாட்டவர் ஒருவர் திபெத்தில் சுற்றுலா சென்ற நிலையில், அவர் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளார்.சுற்றுலா பயணியின் புகாரை அடுத்து அந்த ஹொட்டல் நிர்வாகம் முன்னெடுத்த சோதனையில், படுக்கையின் அடியில் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கொலை வழக்கு விசாரணையை தூண்டியுள்ளது.
ஏப்ரல் 21ம் திகதி லாசாவில் உள்ள ஹொட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 20ம் திகதி தமது நண்பர்களுடன் லாசா பகுதிக்கு சுற்றுலா சென்ற அந்த சீனத்து நபர், ஹொட்டல் ஒன்றில் தங்கும் அறைக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 21ம் திகதி இரவு உணவருந்த சென்ற அவர், சுமார் 10.30 மணியளவில் அறைக்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த அறையில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளதை அவர் உணர்ந்துள்ளார்.இதனையடுத்து, ஹொட்டல் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, தம்மால் அந்த அறையில் தங்க முடியவில்லை எனவும், நாலாவது மாடியில் அறை ஒன்றை ஒதுக்கவும் கோரியுள்ளார்.
இந்த நிலையில், நள்ளிரவு கடந்த வேளையில் பொலிஸார் முன்னிலையில் அந்த ஹொட்டல் அறை பரிசோதிக்கப்பட்டது. அப்போது படுக்கையின் அடியில் சடலம் ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
அந்த ஹொட்டலில் இன்னொரு அறையில் கொலை செய்யபப்ட்டு சடலத்தை குறித்த சீனத்து சுற்றுலா பயணி தங்கியிருந்த அறையில் மறைத்துள்ளனர். பொலிஸார் முன்னெடுத்த துரித நடவடிக்கையின் இறுதியில், சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
You must be logged in to post a comment Login