உலகம்
மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!
சென்னையில் குளிக்க சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் அனகாபுத்தூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி இவருக்கு வயது 41.
இவர் தனது வீட்டில் குளிக்க சென்றபோது குளிப்பதற்காக வெண்ணீர் வைக்க மின்சார கொதிகலன் கருவியை பயன்படுத்தியுள்ளார்.
அப்போது மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது, இதனை கவனிக்காத தேவி கொதிகலன் கருவியை கையில் எடுத்துள்ளார்.
அப்போது மின் இனைப்பு வரவே பயங்கரமாக மின்சாரம் தாக்கி குளியல் அறையில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவரு இரண்டு மகன்கள் உள்ளனர் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
தேவியின் கணவர் சென்னை விமான நிலையத்தில் பனிபுரிந்து வருகிறார்.தேவியின் தம்பி வந்து பார்த்தபோது தனது அக்கா மின்சாரம் தாக்கபட்டு உயிரிழந்தது,
தெரியவர பம்மல் சங்கர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
தகவல் அறிந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றன.
மின்சாரம் தாக்கபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login