உலகம்
பூனை போல முகத்தை மாற்றிக்கொண்ட மொடல்!
அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மொடல் ஒருவர் அசல் பூனையைப் போலவே முகத்தை ஒப்பனை செய்துகொண்டு வந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.
நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தில் மெட் காலா 2023 நிகழ்ச்சி நடந்தது. இதில் அமலா ரத்னா ஸண்டிலே ட்லமினி என்ற மொடல் கலந்துகொண்டார்.அவர் அசலாக பூனையைப் போல் முகத்தோற்றத்தை ஒப்பனை மூலம் செய்துகொண்டு வந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.
டோஜா கேட் என்று அழைக்கப்படும் குறித்த மொடல் பளபளப்பான வெள்ளை உடையில், பூனை காதுகள் மற்றும் கனமான முக செயற்கை அலங்காரத்துடன் காணப்பட்டார்.
அவர் சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்லும்போது, தொகுப்பாளினி ஒருவர் அவரை இடைமறித்து தொடர்ச்சியான கேள்விகளைக் கேட்டார்.ஆனால் அவரது ஒவ்வொரு கேள்விக்கும் டோஜா கேட் ”மியாவ்” என்ற பதிலை மட்டுமே கொடுத்தார். இதனால் தொகுப்பாளினி திகைப்பில் ஆழ்ந்து போனார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: வெறும் ரூ.100 மட்டுமே !..நாள் முழுக்க சென்னையை மெட்ரோவில் சுற்றி பார்க்கலாம் - tamilnaadi.com