உலகம்
பணத்திற்காக பேத்தியைக் கடத்திய தாத்தா!
சீனாவில் சொந்தப் பேத்தியைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
65 வயது யுவான்சாய், பேத்தியை பிணைத்தொகையாக பிடித்து 500,000 யுவானுக்கும் அதிகமாக வழங்குமாறு கோரியுள்ளார்.
இதற்குமுன் அவர் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்துள்ளார். சூதாட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவருக்குப் பணம் தேவைப்பட்டது.
ஒருநாள் தமது 4 வயதுப் பேத்தியைப் பாலர் பள்ளியிலிருந்து அழைக்கச் சென்றார் அவர்.
அவளை வீட்டுக்குக் கொண்டுபோய் விடாமல் தமது மகளை அழைத்து 3 நாள்களுக்குள் 500,000 யுவானைக் கொடுக்கவில்லை என்றால் பேத்தியை இனிமேல் பார்க்கவே முடியாது என்று மிரட்டினார்.
தன் தந்தையின் மிரட்டலுக்குப் பயந்து காவல்துறையைத் தொடர்புகொண்டார் அவரின் மகளாகும். பொலிஸ் அதிகாரிகள் யுவான்சாயைக் கைதுசெய்து குழந்தையை மீட்டெடுத்துள்ளனர்.
நடந்த சம்பவத்துக்குத் தன் மகள்தான் காரணம் என்றும் குடும்ப விவகாரத்தைச் சட்ட விவகாரமாக்கக் கூடாது என யுவான்சாய் கூறினார்.
You must be logged in to post a comment Login