LOADING...

வைகாசி 1, 2023

பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

அமெரிக்காவில் நட்பு ரீதியான விளையாட்டு போட்டியின் போது பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பள்ளி மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மேற்கு வர்ஜீனியாவில் உள்ள வெய்ன் உயர்நிலைப் பள்ளி சாப்ட்பால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மரத்தாலான கட்டிடம் ஒன்றே மொத்தமாக சரிந்து விழுந்துள்ளது.

சம்பவத்தின் போது 6 மாணவர்கள் அந்த மரத்தாலான கட்டிடத்தில் காணப்பட்டுள்ளனர். இதில், திடீரென்று அந்த கட்டிடம் சரிந்து விழுந்ததில், மாணவர்கள் உள்ளிட்ட சிலர் அதில் சிக்கிக்கொண்டனர்.

வெய்ன் உயர்நிலைப் பள்ளி நிர்வாகம் குறித்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், 6 மாணவர்கள் காயங்களுடன் தப்பியதாக தெரிவித்துள்ளனர். 2 மாணவர்கள் ஹெலிகொப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், எஞ்சியவர்கள் ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இதில் நான்கு மாணவர்களை அவர்களின் பெற்றோர்களே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனிடையே, தகவல் அறிந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், என்ன நடந்தது என்பது தங்களுக்கு தெரியவில்லை எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

#world

Prev Post

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நன்கொடையாக காணிகள்!

Next Post

மின்சாரம் தாக்கி உயிாிழப்பு!

post-bars

Leave a Comment