உலகம்
புதினுக்கு பிடிவாரண்ட் – நியாயமானது என்கிறார் பைடன்
உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது.
இந்நிலையில், ரஸ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
குறிப்பாக உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஸ்ய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. போர்க் குற்றத்தைப் புரிந்ததாக கூறி ரஸ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதினின் கைது வாரண்ட் உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பைடன் கூறுகையில், ” உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஸ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது” என்று குறிப்பிட்டார்.
#world
You must be logged in to post a comment Login