உலகம்
மீண்டும் தாக்குதல் அதிகரிப்பு! வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன்


ரஷ்யாவின் ஆயுத கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன்-ரஷியா எல்லைப் பகுதியான பெல் கோரட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரஷ்யாவின் வெடி மருந்து கிடங்கை உக்ரைன் படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.இதில் ஆயுத கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது.
இதுகுறித்து பெல்கோரப் பிராந்தியத்தின் கவர்னர் வியாசெஸ்லாங் கிளாட் சோவ் கூறும் போது, பெல்கோரட் மாவட்டத்தில் உள்ள வெடி மருந்து கிடங்கு உக்ரைன் படையின் தாக்கு தலில் வெடித்து சிதறியது. அப்பகுதியில் இருந்த மக்கள் பாது காப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார்.