உலகம்
ஏலத்துக்கு வருகிறது ஹிட்லரின் கைக்கடிகாரம்
அடொல்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்தில் விடப்படவுள்ளது.
இந்த ‘தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்’ கைக்கடிகாரம் சுமார் 2–4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைக்கடிகாரத்தில் மூன்று திகதிகள் உள்ளன.
ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாஜிப்படை தேர்தலில் வென்ற நாள். ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது.
கைக்கடிகார தயாரிப்பாளர்களும் இராணுவ வரலாற்று ஆசிரியர்களும் இந்தக் கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அந்தக் கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்தக் கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login