உலகம்
வரலாறு காணாத வெப்பம்! – ஐரோப்பாவில் இறப்பு 1000த்தை தாண்டியது
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடும் வெப்ப அலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் ஜூலை தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் லண்டனில் 43 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.
இதுகுறித்து ‘தி கார்டியன்’ வெளியிட்ட செய்தியில், “போர்ச்சுக்கலில் கடந்த வாரத்தில் மட்டும் 659 பேர் வெப்ப அலைக்கு பலியாகினர். போர்ச்சுக்கல்லின் அண்டை நாடான ஸ்பெயினில் 368 பேர் பலியாகினர். ஜூலை 10-ஆம் தேதி முதல் கடும் வெப்பம் நிலவுவதால் இரு நாடுகளிலும் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு 38 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login