உலகம்
ஒரு லீட்டர் எண்ணெய்க்கு பீர்! – சூடு பிடிக்கும் பண்டமாற்று


உக்ரைன் – ரஸ்யா போரால் ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள் சமையல் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பற்றாக்குறையால் தத்தளித்து வருகின்றன.
உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவிகிதம் உக்ரைன் மற்றும் ரஸ்யாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எனவே, உக்ரைன் மீதான ரஸ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை மிக அதிகமாகக் காணப்படுகிறது. சமையல் எண்ணெய் பற்றாக்குறையால் ஜெர்மனியில் உள்ள பல வணிக வளாகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எண்ணெய் வழங்குவதில் கெடுபிடியாகப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், ஜெர்மனியில் உள்ள முனிச் நகர மதுபான விடுதி ஒன்று வித்தியாசமான பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது. அதாவது மக்கள் அருந்தும் பீருக்கு பணம் ( யூரோ) செலுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ஒரு லீட்டர் சூரியகாந்தி எண்ணெய்யைக் கொடுத்து ஒரு லீட்டர் பீரை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.