உலகம்
இத்தாலி பிரதமரும் இராஜினாமா!

இத்தாலியில் மரியோ டிராகி பிரதமராக பதவி வகித்து வருகிறார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார்.
இத்தாலியில் பொருளாதார நிலை தற்போது மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது இராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் இராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இராஜினாமா செய்துள்ள சில தினங்களில் இத்தாலி பிரதம்ர் மரியோ டிராகி இராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
#World
You must be logged in to post a comment Login