உலகம்
5000க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் திருட்டு! – பொலிஸார் வலைவீச்சு


பெண்களின் உள்ளாடைகளையே குறி வைத்து திருடி அவற்றை தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருந்த விசித்திரமான திருடன் குறித்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் வடக்கிலுள்ள நீர்த்தேக்கம் பகுதியில் ஹிக்போர்ட் எனும் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குற்ற புலனாய்வு பிரிவின் உத்தரவின் பேரில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் 5,000 -க்கும் மேற்பட்ட பெண்களின் உள்ளாடைகள் ஆண் ஒருவர் வசிக்கும் வீட்டில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
வடக்கு மெல்போர்னின் நீர்த்தேக்கம் பகுதியில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக நடந்தேறி வந்த கொள்ளை சம்பவங்களின் அடிப்படையில் பொலிஸார் அந்த வீட்டில் சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தான் அங்கு 5000-க்கும் அதிகமான உள்ளாடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்களின் உள்ளாடைகள் மட்டுமல்லாது பெண்கள் உடற்பயிற்சியின் போது அணியும் வேறு ஆடைகளும் இருந்துள்ளன.
வடக்கு மெல்போர்னின் புறநகர்ப் பகுதிகளில் பெண்களின் உள்ளாடைகள், உடற்பயிற்சியின் போது அணியும் ஆடைகளை திருடியவர் யாராக இருந்தாலும் தாமாக முன்வந்து சரணடையுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாது இந்த விசித்திர திருடன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக காவல்துறைக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் மெல்போர்ன் பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர்.