உலகம்
அமெரிக்க சீன அதிபர்கள் பேச்சு!!


உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
அப்போது இருவரும் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்துள்ளனர்.
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்பில் சீனா, ரஷியாவுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்யக்கூடாது.
ரஷியாவுக்கு சீனா உதவி செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.
சீன அதிபர் ஜின்பிங் கூறும்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், ரஷியாவுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறும்போது, போரை நடத்துவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. உலக அமைதிக்கான முயற்சியின் ஒரு பகுதியாக உலகின் முதல் 2 பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உறவுகள் சரியான பாதையில் முன்னேற வேண்டும் என்றார்.
#WorldNews
US Chinese Presidents Talk !!
You must be logged in to post a comment Login