உலகம்
தண்ணீருக்காக மோதல்: அகதிகளான ஒரு இலட்சம் மக்கள்!!


தண்ணீருக்காக மோதிக்கொண்டதில் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக மாறியுள்ளதாக ஐ.நா.வின் அகதிகள் நிறுவனமானது அறிவித்துள்ளது.
வடக்கு கேமரூனிலேயே தண்ணீருக்கான மோதல் இடம்பெற்றுள்ளது.
கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள் தண்ணீருக்காக மோதிக் கொண்டதில் 44 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் தொடர் போராட்டங்களால் வாழ்வாதாரம் இழந்த மக்கள், தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சாட் நாட்டில் புகலிடம் கோரி வருகின்றனர்.
இதனால், தஞ்சம்கோரிய மக்களுக்கு தங்குமிடம், போர்வை, படுக்கைகள், சுகாதார கருவிகள் என அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.