உலகம்
குழந்தைகளுக்கான கொவிட் தடுப்பூசியும் ரெடி!!!
குழந்தைகளுக்கான கொவிட்-19 தடுப்பூசி, எதிர்வரும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகிறது.
6 மாதங்களில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப் போவதாக அதன் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா (Adar Poonawalla) தெரிவித்துள்ளார்.
கோவோவேக்ஸ் (Covovax) என அழைக்கப்படும் அந்த தடுப்பூசியை 3 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளிடம் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது அதன் பலன்கள் நன்மையாக இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#WorldNews
You must be logged in to post a comment Login