உலகம்
பிரதமர் இல்லத்தில் பேய்: பிரதமர் கூறிய பதில் இதோ!!
இதுவரை பிசாசை நான் பார்க்கவில்லை என பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார்.
ஜப்பானில் கடந்த 1963 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்துக்குள் புகுந்த இராணுவ வீரர்கள் அமைச்சர் ஒருவர் உட்பட மூத்த அரசு அதிகாரிகள் பலரைச் சுட்டுக்கொன்றனர்.
இதனையடுத்து, பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பேய்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பிரதமர்களில் பலர் குறித்த பிரதமர் இல்லத்தில் தங்குவதைத் தவிர்த்து வந்துள்ளனர்.
அந்த வகையில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தங்குவது இல்லை.
இந்தநிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற புமியோ கிஷிடோவிடம் குறித்த இல்லத்தில் தங்க வேண்டாம் என அறிவுரை வழங்கியிருந்தனர்.
இருப்பினும் அனைவரது அறிவுரையையும் மீறி ஜப்பானின் புதிய பிரதமரான புமியோ கிஷிடோ நேற்றுமுன்தினம் பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு குடி பெயர்ந்தார்.
இதனைத்தொடர்ந்து குறித்த இல்லம் எப்படி இருந்தது, நிருபர்கள் கேள்விகளைத் தொடுத்திருந்தனர்.
அப்போது அதற்கு அவர் பதிலளிக்கையில்;
நேற்று, இரவு நான் நன்றாக தூங்கினேன். இதுவரை அந்த மாளிகையில் பேய், பிசாசை நான் பார்க்கவில்லை” என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
#WorldNews
You must be logged in to post a comment Login