உலகம்
உக்ரைனிற்கு காவல் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா!
உக்ரைனுக்கு 2 கடலோர காவல் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
ரஷ்யாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு அமெரிக்கா இதனை வழங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் உக்ரைனின் க்ரீமிய தீபகற்பத்தை ரஷ்யா அதனுடன் இணைத்துக்கொண்டது.
இந்த நிலையில், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளன.
அண்மையாக நாட்களாக உக்ரைன் அருகில் ரஷ்யா படைகளை குவித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவுக்கு உட்பட்ட இடங்களில் படைகளை குவிக்க உரிமை உள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லை எனவும் ரஷ்யா கூறியுள்ளது.
#world
You must be logged in to post a comment Login