செய்திகள்
மகிழ்ச்சியில் அகதிகள்- விசா வழங்கியது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களிலும் குடிவரவுத் தடுப்புகளிலும் கடந்த 8 ஆண்டுளுக்கு மேலாக சிறைவாசம் இருந்த 4 அகதிகளுக்கு இணைப்பு விசாக்களை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.
இதன் காரணமாக , இந்த 4 அகதிகளும் அவுஸ்திரேலியாவில் தற்காலிகமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளை , இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளுக்கு நிரந்தரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
விசா கிடைத்த ஆப்கானிய அகதி அகமது ஜஹிர் அசிசி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தான் இனி கைதி கிடையாது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .
மேலும் தெரிவித்த அவர் “நான் விடுதலை ஆகிவிட்டேன். 8 ஆண்டுகளாக சிறையில் கிடந்த நான், இன்று விடுதலை ஆகிவிட்டேன் என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்,’ என ஆப்கானிய அகதி அசிசி குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு அவுஸ்திரேலியாவில் இன்னு பல அகதிகள் உள்ளதாகவும் அவர்களுக்கும் விசா கிடைத்தால் அவர்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் எனவும் அவுஸ்திரேலியா அரசுக்கு நான் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
#world
You must be logged in to post a comment Login