செய்திகள்
இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு – துருக்கி அரசு
இந்திய,நேபாள பயணிகளுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய, நேபாள நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
துருக்கி நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென துருக்கி அரசு தெரிவித்த நிலையில், இந்திய, நேபாள பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் துருக்கி அரசு வெளியிட்ட விசேட செய்தியில்,
“இந்தியா, நேபாளத்திலிருந்து துருக்கிக்கு வரும் பயணிகள் உலக சுகாதார அமைப்பால் அங்கிகரிக்கப்பட்ட இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் இன்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மேலும் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழையும் பயணிகள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தடுப்பூசி சான்றிதழ் இல்லாத பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தனிமைப்படுத்தலின் 10வது நாளில் பிசிஆர் பரிசோதனை சோதனை செய்யப்படும்.
அத்தோடு 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் பயணத்திற்கு முன்பு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
துருக்கி வந்த பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்பு பெற்றோருடன் அனுமதிக்கப்படுவர்.
மேலும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை அல்லது தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை எனவும் துருக்கி அரசு அறிவித்துள்ளது.
#world
You must be logged in to post a comment Login