செய்திகள்
சிறையில் கலவரம் – 68 பேர் சாவு !!
ஈக்குவடோரில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் சாவடைந்துள்ளனர்.
ஈக்குவடோரில் உள்ள சிறையில் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலவரத்தில் 68 பேர் சாவடைந்ததோடு 25 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் உள்ள சிறைச்சாலையிலேயே இந்த கலவரத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் கடந்த புரட்டாதி மாதம் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 100 கைதிகள் சாவடைந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு மீளவும் கலவரம் ஏற்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிகளவான இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஈக்குவடோரில் கடந்த ஆண்டின் இதுவரையாக காலப்பகுதிக்குள் மாத்திரம் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 300 பேர் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WORLD
You must be logged in to post a comment Login