உலகம்
அந்தரத்தில் நடந்த இளைஞன்! – ஈபிள் கோபுரத்தில் சகாசம்
உலக சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வானளாவிய உயரத்தில் அமைந்துள்ள “ஈபிள் கோபுரம் ” ஆகும்.
தற்சமயம் ஈபிள் கோபுரத்திலிருந்து 600 மீற்றர் தூரம் கயிற்றில் கடந்த வீரரின் சாகசம் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
நேதன் பாவ்லின் என்ற 27 வயது ஆண் ஒருவரோலேயே இச் சாகசம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இவ் இளைஞர் 70 மீற்றர் உயரத்தில், ஈபிள் கோபுரத்திலிருந்து, சீன் ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள கலை அரங்கக் கட்டடத்துக்கு கயிற்றில் நடந்து சென்றது மட்டுமல்லாமல் பல்வேறு சாகசங்களும் புரிந்துள்ளார்.
இச் சாகசம் தொடர்பாக நேதன் பாவ்லின் தெரிவிக்கையில் “4 ஆண்டுகள் பயிற்சிக்கு பின்னரே வெற்றிகரமாக இந்த சாகசம் செய்யமுடிந்தது” என்று குறிப்பிட்டார்.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டும் இதேபோன்று சாகசம் புரிந்துள்ளார்.
பிரான்ஸ் தேசிய மரபுடைமை நாளையொட்டியே அந்தச் சாகசத்தில் நேதன் பாவ்லின் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login