உலகம்

காங்கோவில் மூளைக்காய்ச்சல் – 120க்கும் மேற்பட்டோர் சாவு

Published

on

ஆபிரிக்க நாடான  காங்கோவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் பரவிவரும் இந்த நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நோய் பரவலானது சூனியத்துடன் தொடர்புடையது என்று அந்த நாட்டு மக்கள் நம்புகின்றனர். மக்களிடம் காணப்படும் இந்த மூடநம்பிக்கை காரணமாக இந்த நோயைக் கட்டுப்படுத்துவது கடினம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய்க்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, ஓர் இடம் விட்டு வேறோர் இடத்துக்கு இடம்பெயர்ந்தால்
நோய் தங்களை பின்தொடராது என்ற நம்பிக்கையில் இடம்பெயர்கின்றனர்,

அபாயகரமான இந்த மூளைக்காய்ச்சல், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுவாசம் மற்றும் தொண்டை சளி வெளியே வந்து அதன் மூலம் நோய் பிறருக்கு பரவுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கோவின் வட கிழக்கு மாகாணமான ஷோபோ, மூளைக்காய்ச்சலின் மையமாக திகழ்கிறது.. இதனைக் கட்டுப்படுத்த காங்கோ அரசும் உலக சுகாதார அமைப்பும் ஷோபோவுக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version