உலகம்
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது!
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது!
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏறத்தாழ ஓராண்டை கடந்த நிலையிலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இது உருமாற்றம் அடைந்து அல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல்வேறு வகைகளில் உருமாறி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, பிரேஷில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.
அதேவேளை கொரோனா பாதிப்பிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login