செய்திகள்
ஆப்கான் குண்டு வெடிப்பு!! – இதுவரை 73 உயிர்கள் காவு!
ஆப்கான் குண்டு வெடிப்பு!! – இதுவரை 73 உயிர்கள் காவு!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று மாலை இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை உறுதி செய்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 60 ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் 13 அமெரிக்க படை வீரர்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
You must be logged in to post a comment Login