Connect with us

உலகம்

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள் – வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்!

Published

on

af

காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள் – வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்!

ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்திய நிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்கா உட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சில வார கால இடைவெளிக்குள்- நாட்டின் எண்பது வீதமான பகுதிகளை தலிபான் படைகள் கைப்பற்றிவிட்டன.

நாட்டின் இரண்டாவது, மூன்றாவது பெரிய நகரங்களாகிய கந்தஹார் (Kandahar) ஹெரத்(Herat) இரண்டையும்
கைப்பற்றிவிட்ட தலிபான்கள் சனிக்கிழமை தலைநகரில் இருந்து 11 கிலோ மீற்றர்கள் தொலைவில் நிலைகொண்டிருந்தனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆப்கானிய மக்கள் பலரும் தாங்கள் உலகத்தால் கைவிடப்படுகின்றோம் என உணர்கின்றனர். பெரும் பதற்றத்துக்கு மத்தியில் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) நாட்டுக்கு ஆற்றிய ஓர் உரையில், தலிபான்களிடம் இருந்து தலைநகரைப் பாதுகாப்பதற்காக மீள அணிதிரளுமாறு தனது முப்படையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

தலிபான்கள் மோதலைத் தவிர்த்து அரசியல் வழிமுறைகளில் அதிகாரத்துக்கு வருவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று ஐ. நா. செயலாளர் நாயகம் கேட்டிருக்கிறார்.

நாட்டின் தேசியத் தலைநகரான காபூல் வரும் நாள்களில் தலிபான்களிடம் வீழும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா அங்குள்ள தனது ராஜதந்திரிகளையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக மூவாயிரம் துருப்பினரை காபூலில் இறக்கி உள்ளது.

இங்கிலாந்து தனது பிரஜைகள் வெளியேற்றுவதற்காக அறுநூறு படைவீரர்களை அங்கு அனுப்பியிருக்கிறது. பலநாடுகளும் தங்களது தூதரகப் பணியாளர்களது எண்ணிக்கையைக் குறைத்து மூடுவதற்கான ஆயத்த நிலையில் உள்ளன.

aff

டென்மார்க், நோர்வே தூதரகங்கள் மூடப்பட்டவிட்டன. டென்மார்க் தனது தூதரகத்தில் பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது நாட்டில் அரசியல் புகலிடம் அளித்துள்ளது.

20 ஆயிரம் பேருக்கு கனடாவில் புகலிடம் மிக முக்கிய உதவியாக கனடா நாடு பெண்கள், சிறுவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான சுமார் இருபது ஆயிரம் ஆப்கானிஸ்தானியர்களைத் தனது நாட்டில் குடியமர்த்த முன்வந்துள்ளது.

அமெரிக்கா உட்பட வெளிநாட்டுப் படையினருக்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணியாற்றிவந்த நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கும் பல நாடுகளில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசியல் நிலைவரம் நிச்சயமற்ற நிலைமைக்குள் சென்று கொண்டிருப்பதால் தத்தமது நாடுகளில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களைக் கட்டாயமாகத் திருப்பி
அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன.

சமீப காலமாக பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோருகின்ற வெளிநாட்டவர்களில் ஆப்கானிஸ்தானியர்களே முதலிடத்தில் உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8 ஆயிரத்து 886 ஆப்கானியர்கள்
பிரான்ஸில் தமது தஞ்சக் கோரிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

தற்போது இடம்பெறும் மோதல்களில் பல லட்சக்கணக்கானோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். அதனால் வரும் நாள்களில் அங்கிருந்து குடிபெயர்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 18.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 18, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 நாள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...