உலகம்
62 லட்சம் பேருக்கு மேல் பிரிட்டனில் கொரோனாத் தொற்று!
62 லட்சம் பேருக்கு மேல் பிரிட்டனில் கொரோனாத் தொற்று!
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, 62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 62 லட்சத்து 11 ஆயிரத்து 868 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 801 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றால், 32 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 13 லட்சத்து 11 ஆயிரத்து 11 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 882 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
You must be logged in to post a comment Login