6 16
உலகம்செய்திகள்

கனடாவில் வேலைக்காக வரிசையில் நிற்கும் மக்கள்: இணையத்தில் பரவும் காணொளி

Share

கனடாவில்(Canada) சாதாரண வேலைக்கு கூட நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் வகையிலான காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.

இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த காணொளியே தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த காணொளி கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது.

குறித்த காணொளியில்,

“வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும்.

ஆனால் சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும். இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது.

வெளிநாடுகள் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.

இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும். இது கனடாவின் யதார்த்தம்.

நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும்” என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் பல நகரங்களிலும் இதே நிலைமை இருப்பதாக பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...

gota
இலங்கைஅரசியல்செய்திகள்

நிரந்தர முகவரிகளைச் சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு: முன்னாள் ஜனாதிபதி உட்படப் பல முக்கிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

‘அரகலய’ போராட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட...