13 6
உலகம்செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் – மனித உரிமைகள் ஆணையாளருக்கு இடையே விசேட கலந்துரையாடல்

Share

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது ஆளுநர் செயலகத்தில் நேற்று (25.06.2025) மாலை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் ஆகியோரும், ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, மீள்குடியமர்வு – காணி விடுவிப்புத் தொடர்பில் தற்போதைய நிலைமைகளை ஆணையாளர் கேட்டார்.

மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்கு அமைவாக படிப்படியாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன. இன்னமும் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளன என்று சுட்டிக்காட்டினோம்.

மேலும், வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன இங்குள்ள அதிகாரிகளுக்குத் தெரியாமல் காணிகளை சுவீகரித்துள்ளன.

இதனால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் விவசாயக் காணிகள் என்பன இழக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசாங்கம் மாவட்ட ரீதியிலான குழுக்களை அமைத்து இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்பதை ஆணையாளருக்கு தெரியப்படுத்தினேன்.

காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பிலும் ஆணையாளரும், ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் விடயங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.

அந்தப் பொறிமுறை சரியானது என்றும், ஆனால் மக்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் மாவட்டச் செயலர்கள் இதன்போது ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினர்.

மேலும், ஆணையாளர் இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன என்றும் இன்னமும் சில பிரச்சினைகள் அதில் உள்ளன எனவும் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டினேன்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலும் ஆணையாளர் கரிசனையை வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிப்பிட்டேன். அத்துடன் கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்கள் வெளிப்படுத்திய வேறுபாடுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என்பதையும், அது முற்போக்கானது என்பதையும் ஆணையாளருக்கு தெளிவுபடுத்தினேன்.

மேலும், வடக்கில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் தொடர்பிலும் என்னாலும், மாவட்டச் செயலர்களாலும் ஆணையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 67874f1d5d009
செய்திகள்இலங்கை

தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் ஆபத்து: வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவர்களுக்கு இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை!

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி...

images 7 3
செய்திகள்இலங்கை

பேருந்து கட்டணம் செலுத்த புதிய வசதி: வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் – அமைச்சர் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் (Bank Cards) மூலம் பேருந்து கட்டணங்களைச்...

images 6 3
உலகம்செய்திகள்

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட காஸா சிறுமி: சவக்கிடங்கில் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச்...