இந்த ஆண்டின் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் யார்?

download 4 1

ஐசிசி 2021 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 13 பிரிவுகளில் சிறந்த வீரர்களை தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டு 15 டெஸ்ட்களில் விளையாடி 1078 ரன்களை விளாசியிருக்கிறார். அதில் 6 சதம். மேலும் சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவரும் இவர்தான்.

அடுத்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் இந்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து 27 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அடுத்து இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே இந்த ஆண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 902 ரன்களை குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் 4 சதம்.

இதைத்தொடர்ந்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் பேட்டிங்கில் 1 சதத்தையும் அவர் விளாசியிருக்கிறார்.

இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் 4 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர். இதில் யார் விருதைப் பெறுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

#Sports

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version