செய்திகள்
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மகேந்திர சிங் தோனி
சிஸ்கே வீரர் எம்எஸ் தோனி ஐபிஎல் 2024ல் நான்கு மெகா சாதனைகளை படைத்துள்ளார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தோனி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார்.இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் அடித்து திணறடித்தார்.
இதன்மூலம் ரி20 கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்களைக் கடந்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், 42 வயதான இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் 5000 ஓட்டங்களைக் கடந்த முதல் விக்கெட் கீப்பரும் ஆவார். ஐபிஎல் போட்டிகளில் 19வது மற்றும் 20வது ஓவரில் 100 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.