செய்திகள்

வரலாற்றிலேயே மோசமான சாதனையை படைத்த இந்திய அணி

Published

on

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், அதன் பின்னர் ஒரு ஓட்டங்களையேனும் பெறாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இதன் மூலம், வரலாற்றில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் தொடர்ச்சியாக ஆறு விக்கெட்டுக்களை இழந்த ஒரே அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இந்திய அணி 153/4 என்ற நிலையில் இருந்த போது லுங்கி இங்கிடி வீசிய ஓவரில் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் ஆட்டமிழந்துள்ளனர்.

தொடர்ந்து, காகிசோ ரபாடா வீசிய ஓவரில், விராட் கோஹ்லி, பிரசித் கிருஷ்ணா மற்றும் முஹம்மத் சிராஜ் ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

குறித்த ஆறு விக்கெட்டுக்களும் லுங்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா வீசிய 11 பந்துகளில் சரிந்துள்ளன.

தென்னாபிரிக்காவின் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அத்துடன், முதலாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version