செய்திகள்
அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி


அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது விராட் கோலி மார்னஸ் லாபுசாக்னேவை விடாமல் பார்த்த காணொளி வெளியாகியுள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உலகக் கோப்பை 2023 இறுதி மோதலின் போது, ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பிற்கு பின் துடுப்பாட்டம் செய்ய வரும் மார்னஸ் லாபுசாக்னேவை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பார்த்துள்ளார்.
பதிலுக்கு மார்னஸ் லாபுசாக்னேவும் கோலியை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துள்ளார்.
குறிப்பாக 2003-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்குப் பழிவாங்கும் இந்தியாவின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை பொய்த்துப் போனது.
2023 ODI உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியையும் வென்றதன் மூலம், குறிப்பிடத்தக்கவகையில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதற்கு நேர்மாறாக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது தொடக்க இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தடுமாறியது, ஆனால் அடுத்த எட்டு போட்டிகளில் வெற்றி விளையாடி இறுதிப் போட்டியில் நுழைந்து, icc world cup championship என்ற பட்டத்தையும் வென்றது.