tamilni 296 scaled
செய்திகள்விளையாட்டு

இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம்: ரோகித் சர்மா

Share

இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம்: ரோகித் சர்மா

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் இறுதிப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், செய்த தவறு குறித்து அணித்தலைவர் ரோகித் சர்மா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணியின் வெற்றி இரகசியத்தை குறிப்பிட்ட ரோகித் சர்மா, இந்திய அணியின் தோல்விக்கு “சாக்கு சொல்ல விரும்பவில்லை” எனவும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இரண்டாம் துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியில் வென்றது.

இரண்டாம் பாதியில் துடுப்பாட்டத்தில் இறங்கும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கிரிக்கெட் ஆர்வலர்களால் கூறப்பட்டது

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடிய போது எல்லைக்கோட்டுக்கு அப்பால் பந்துகளை விரட்டவே கடினமாக இருந்த நிலையில், அவுஸ்திரேலிய அணி இரண்டாம் பாதியில் துடுப்பெடுத்தாடிய போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆடுகளத்தின் தன்மை மாறியதால் இந்திய பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனது. அதுவே போட்டியில் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பில் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், “போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக வரவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம்.

ஆனால், எதுவும் சரியாக நடக்கவில்லை. இன்னும் 20 – 30 ஓட்டங்கள் கூடுதலாக எடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கோஹ்லி, ராகுல் கூட்டணி ஆடிய போது 270 – 280 ஓட்டங்கள் வரை எடுப்போம் என நினைத்தேன்.

ஆனால், விக்கெட்டை வரிசையாக இழந்தோம். 240 ஓட்டங்கள் மட்டுமே வைத்துக் கொண்டு பந்து வீசும் போது நாங்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தி இருக்க வேண்டும்.

ஆனால், ஹெட் – லாபுஷேன் சிறப்பான இணைப்பாட்டமொன்றை அமைத்து ஆடினார்கள். எங்களை இந்தப் போட்டியில் இருந்தே வெளியேற்றி விட்டார்கள்.

மின் வெளிச்சத்தில் ஆடுகளம் சற்று மாறி விட்டதாக கருதுகிறேன். ஆனால், அதை ஒரு “சாக்காக” கூற விரும்பவில்லை.

நாங்கள் போதுமான ஓட்டங்கள் குவிக்கவில்லை” என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...